உலகக் கோப்பை கால்பந்து போட்டிமுதலாவது அரையிறுதி போட்டி நாளை ஆரம்பம்

பிரேசிலில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதி நிலையை எட்டியுள்ளது.         new-Gif

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகளில் 32 நாடுகள் பங்குபெற்றன. இதில் நான்கு நாடுகள் இப்போது இறுதிப் போட்டிக்கு முந்தையக் கட்டத்தை அடைந்துள்ளன.

ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளன.

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

முதல் காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-பிரான்ஸ் அணிகள் மோதின. அந்த ஆட்டத்தில் ஜெர்மனி 1-0 எனும் கணக்கில் வென்றது.

இரண்டாவது காலிறுதி ஆட்டம் பிரேசில் மற்றும் கொலம்பியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரேசில் 2-1 என வென்றது.

மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா பெல்ஜியத்தை 1-0 என்று வீழ்த்தி அரையிறுக்குள் நுழைந்தது.அந்த அணியின் ஒரே கோலை, கொன்சாலோ ஹூகவே அடித்தார்.

கோஸ்ட்டாரிக்கா-நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி காலிறுதி ஆட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தது. அதில் பெனால்டி முறையில் நெதர்லாந்து 4-3 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

நெதர்லாந்து-கோஸ்ட்டாரிக்கா போட்டி மிகவும் விறுவிறுப்பாகச் சென்றது

அரையிறுதியின் முதல் ஆட்டம் ஜெர்மனி-பிரேசில் அணிகளுக்கு இடையேயும், இரண்டாவது அர்ஜெண்டினா-நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயும் நடைபெறுகிறது. இவை முறையே எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறும்.

இதனிடையே பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர் என்று அறியப்படும் நெய்மாருக்கு முதுகுத் தண்டுவடத்தில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக அவர் மேற்கொண்டு இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தியாகோ சில்வாவுக்கு இரண்டாவது முறையாக எச்சரிக்கை.அரையிறுதியில் ஆட முடியாது

அணியின் தலைவர் தியாகோ சில்வாவுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரும் அரையிறுதிப் போட்டியில் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த இருவரது இழப்பை அரையிறுதியில் பிரேசில் எப்படி ஈடுகட்டும் என்பதே இப்போது எழுந்துள்ள பெரிய கேள்வி.

.140704214435_james_rodriguez_512x288_getty

140705201025_thiago_silva_cartao_amarelo_colombia_copa_512x288_afp

140705233057_robin_netherland_costarica_worldcup_512x288_gettyimages

140706135740_brasil_sem_neymar_512x288_reuters_nocredit

.600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*