தமிழர் புனர்வாழ்வுக்கழகம்,உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா 2014

பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வுக்கழகம்  மற்றும் பிரான்ஸ் உலகத் தமிழர்  பண்பாட்டு இயக்கம் இணைந்து நடாத்திய தமிழர் விளையாட்டு விழா         new-Gifஇன்று லுபுசை le bourget விளையாட்டு மைதானத்தில் காலை 09.30 மணியளவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட  நினைவுத் திடலில் ஆரம்பமாகியது. ஆரம்ப நிகழ்வாக  பொதுச்சுடரை  நடராஐா  ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து மண்மீட்புப் போரில் மடிந்த மாவீரர்களுக்கும் ,மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர்வணக்கம் செய்யப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய தவில்,நாதஸ்வர இசை முழங்க   கொடியேற்றும் இடம்வரை  விருந்தினர்கள்  அழைத்துச் செல்லப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கொடியேற்றல் இடம்பெற்றது. பிரான்ஸ் கொடியை DRANCY மாநகரசபை உறுப்பினர் திரு. அலன் ஆனந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார். ஐரோப்பிய கொடியை தமிழர்களின் பாதுகாப்பு குழுத்தலைவியும்,கமுனிஸ் கட்சியின் பாரளமன்ற உறுப்பினர் திருமதி. மரியோஸ் பூவே அவர்கள் ஏற்றி வைத்தார்.தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கொடியை திரு.தம்பையா விநாயகமூர்த்தி தமிழர் புனர்வாழ்வுக் கழக பிரான்ஸ் கௌரவ உறுப்பினர்  அவர்கள் ஏற்றி வைத்தார்.

மயிலையூர் நாகலிங்கம் இந்திரன் அவர்களினால்  வாழ்த்துப்பா இசைக்கப்பட்டது.

பின்பு விருந்தினர்கள் கௌரவிப்பு இடம்பெற்றது.

அதைத் தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிப்பு இடம்பெற்றது.

தொடர்ந்து விளையாட்டுக்கள் ஆரம்பமாகியது.உதைப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் பாடுமீன் A,பாடுமீன்B அணிகள் மோதின.மற்றொரு மகளீர்களுக்கான  உதைப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் ஈழவர்A, ஈழவர்B விளையாட்டுக் கழகம் மோதியது.கரப்பந்தாட்டம்,சதுரங்கப்போட்டி,கிளித்தட்டு ,கயிறுஇழுத்தல், கரம் போட்டிசங்கீதக்கதிரை,தலையணைச்சண்டை போட்டிகள் இடம்பெற்றன.

இளையோர்களுக்கான சித்திரப்போட்டி,குறிபார்த்துச்சுடுதல்,மீன்பிடித்தல் போன்ற போட்டிகளும் சிறுவர்களைக் கவரக் கூடிய விளையாட்டுக்கள் மைதானத்தில் அமைக்கப்பட்டருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

வெற்றி பெற்ற வீர ,வீரங்கனைகளுக்கு பெறுமதி மிக்க கேடயங்களும்,வெற்றி பதக்கங்களும் வஙங்கப்பட்டது.

மறுபுறம் இசைக்குழு இடம்பெற்றதையும் அவதானிக்கமுடிந்தது.இன்னொருபுறம் தீபம் தொலைக்காட்சியினரின் ஆம் இல்லை என்ற சொற்களை தவிர்த்த விநாடி போட்டி இடம்பெற்றது.

காலநிலை சீரற்று இருந்த போதிலும் தமிழர்கள் நாம் எந்த தடைவரினும் அஞ்சிடோம் என நம்மவர்கள் விளையாட்டுக்களில் பங்குபற்றியதை பாராட்டியே ஆக வேண்டும்.

மைதானத்தை சுற்றி கடைகள் அமைக்கப்பட்டு மலிவு விலையில் பொருட்கள் விற்கப்பட்டதையும் மக்கள் பொருட்களை வாங்கிச் சென்றதையும்  காணக்கூடியதாக இருந்தது.

சிற்றூணடிசாலைகளில் தாயக உணவுகளிற்காக மக்கள் முண்டியடித்து நின்றதையும் அவதானிக்கமுடிந்தது.

விளையாட்டைக் கண்டுகளிக்க வந்த மக்களுக்கு le bourget  gare இருந்து மைதானம் வரை இலவச போக்குவரத்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

DSC_0002 copyDSCN4942 copy DSCN4943 copy DSCN4952 copy DSCN4953 copyDSCN4962 copy DSCN4964 copy DSCN4959 copy DSCN4960 copy DSCN4958 copy DSCN4957 copy DSCN4956 copy DSCN4955 copyDSCN4977 copy DSCN4983 copyDSC_0056 copy

DSCN5004 DSCN5007 DSCN5011 DSCN5022

DSC_0134 DSC_0177 DSCN5127 DSCN5121 DSCN5111 DSCN4998 DSC_0137 DSC_0151 DSC_0156 copy DSC_5149

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*