முதல் கால் இறுதி ஆட்டத்தொடரில் ஜெர்மனி-பிரான்ஸ் நாளை மோதுகின்றன.

உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினத்தோடு 2–வது சுற்று new-Gifமுடிந்தது.

இதன் முடிவில் முன்னாள் சாம்பியன்கள் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து, கொலம்பியா, பெல்ஜியம், கோஸ்டாரிகா ஆகிய நாடுகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

2 நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ரியோடி ஜெனீரோவில்  முதல் கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி– பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் பலம் பொருந்தியவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி அணிகளில் ஒன்றாக ஜெர்மனி திகழ்கிறது. 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அந்த அணி கடந்த 3 உலக கோப்பையிலும் அரை இறுதிக்கு நுழைந்து இருந்தது. தற்போது 13–வது முறையாக அரை இறுதியில் நுழைவதில் ஆர்வமாக இருக்கிறது.

ஜெர்மனி அணியின் நட்சத்திர வீரராக தாமஸ் முல்லர் ஜொலிக்கிறார். அவர் இதுவரை 4 கோல் அடித்துள்ளார். இது தவிர ஒசில், கவாஸ்டிக்கர், ஹம்மல்ஸ், ஆந்த்ரே, கேப்டன் பிலிப் போன்ற சிறந்த வீரர்களும் ஜெர்மனி அணியில் உள்ளனர்.

‘லீக்’ ஆட்டங்களில் 4–0 என்ற கணக்கில் போர்ச்சுக்கலையும், 1–0 என்ற கணக்கில் அமெரிக்காவையும் தோற்கடித்தது. கானாவுடன் 2–2 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. 2–வது சுற்றில் அல்ஜிரியாவை 2–1 என்ற கோல் கணக்கில் வென்றது. தோல்வியை சந்திக்காத ஜெர்மனி அரை இறுதிக்கு தகுதி பெற கடுமையாக போராட வேண்டும்.

ஜெர்மனி அணிக்கு எல்லா வகையிலும் சவால் விடக்கூடிய வகையில் பிரான்ஸ் அணி உள்ளது. இந்த போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் அணிகளில் ஒன்றாக திகழ்கிறது.

அந்த அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சிறப்பாக ஆடி வருகிறார். அவர் 3 கோல்கள் அடித்துள்ளார். இது தவிர போக்பா, கிரவுட் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

பிரான்ஸ் அணி ‘லீக்’ ஆட்டங்களில் 3–0 என்ற கணக்கில் ஹோண்டுராசையும், 5–2 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும் வென்றது. ஈக்வடாருடன் 0–0 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. 2–வது சுற்றில் நைஜீரியாவை 2–0 என்ற கணக்கில் வென்றது.

1998–ம் ஆண்டு சாம்பியனான அந்த அணி 6–வது முறையாக அரை இறுதியில் நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*