ஆப்கன் ராணுவத்தினரின் பேருந்து மீது தற்கொலைப்படை தாக்குதல்.

ஆப்கன் தலைநகரில் ராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்தின் மீது தற்கொலைப்படை குண்டுதாரிnew-Gif ஒருவன் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியானதுடன் 13 பேர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காபூல் நகரில் தாலிபான்கள் மற்றும் கிளர்ச்சியார்கள் தொடர் தாக்குதலில் ஈடுபடுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் இன்று அங்கு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியானவர்களில் ஐந்து பேர் விமான படையை சேர்ந்தவர்கள் என்று காபூல் காவல்துறை தலைவரின் செய்தி தொடர்பாளரான ஹஷ்மத் ஸ்டானெக்சாய் கூறியுள்ளார்.

அந்நாட்டிலிருந்து நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில், பாதுகாப்பு பணியை ராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது. அங்கு நடைபெறும் இரண்டாவது கட்ட பிரதமர் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*