உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிக்கு அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி பெல்ஜியம் தகுதி

பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ‘நொக்கவுட்’ சுற்றில் அமெரிக்காவைnew-Gif எதிர்கொண்ட பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் எதிர் அணியை வீழ்த்தி காலிறுதியில் விளையாடும் தகுதியை பெற்றது.

ஆரம்பத்தில் இருந்தே பந்தினை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள போராடிய இரு அணிகளின் கோல் கனவும் இலக்கிடப்பட்ட 90-வது நிமிடம் வரையில் நிறைவேறாத நிலையில் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அதன்படி, 92-வது நிமிடத்தில் பெல்ஜியம் தனது கோல் கணக்கினை துவங்கியது.

பின்னர், அதற்கு பதிலடி கொடுக்க முயற்சித்த அமெரிக்காவின் கனவை தவிடுபொடியாக்கி 104-வது நிமிடத்தில் பெல்ஜியம் இரண்டாவது கோலையும் பதிவு செய்ய, அமெரிக்க அணி நிலைகுலைந்துப் போனது. சுதாரித்துக் கொண்டு 106-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் வலையை நோக்கி செலுத்திய பந்து, பெல்ஜியம் கோல் கீப்பரை
ஏமாற்றி விட்டு அமெரிக்காவின் முதல் கோலாக மாறியது.

பின்னர் 120-வது நிமிடம் வரை இழுபறியாக நீடித்த ஆட்டத்தின் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்திய பெல்ஜியம் அணி காலிறுதிக்கு தகுதி பெற்று முன்னேறியது.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*