கோத்தபயாவுக்கு எதிராக ஏராளமான சாட்சியங்கள் உள்ளன -கைதை உறுதிப்படுத்திய அமெரிக்க பேராசிரியர்!

கோத்தபயாவுக்கு எதிராக ஏராளமான சாட்சியங்கள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். நியூயார்க் பல்கலைக்new-Gif கழகத்தின் சட்டக்கல்லூரியில் இவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மேலும் கூறுகையில் “அமெரிக்காவில் உள்ள சிறைச்சாலைகளின் உள்சுவர்கள் எப்படி இருக்கும் என்று கோத்தபயா பார்க்காவிட்டாலும் விரைவில் அதை அவர் பார்க்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடருகின்றன என்றும் அறிவித்தார்.

தமிழ்த் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் சரணடைந்தவுடன் அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக கொலை செய்யும்படி கோத்தபயா ராசபக்சே உத்தரவிட்டதற்கு சாட்சியங்கள் உள்ளன. விடுதலைப்புலிகளுக்கு எதிரானப் போரில் எப்படியும் வெற்றிபெறுவதற்காக அப்பாவி பொதுமக்களை வேண்டுமென்றே கொலை செய்ய தான் ஒருபோதும் தயங்கப்போவதில்லை என பலமுறை அவர் கூறியுள்ளார் என பேராசிரியர் ரைடன் குட்மேன் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு இலங்கையில் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது. இலங்கை அதிபர் இராசபக்சேயின் சொந்தத் தம்பியும், பாதுகாப்புத் துறைச் செயலாளருமான கோத்தபயாவுக்கு எதிரான இந்த அறிவிப்பு ராசபக்சே குடும்பத்தைக் கலங்கடித்துள்ளது.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*