இரவல் வாகனத்தில் செல்லும் எம்மைக் குற்றம்சாட்டுகிறார்!78 இலட்சம் ரூபாவுக்கு வாகனம் வாங்கிய யாழ்.மேயர்.

வடமாகாணசபை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சட்டவிதிகளுக்கு முரணாக வாகனங்களை வாங்கி சுகபோகம் அனுபவிக்க நினைப்பதாக     new-Gifயாழ்.மாநகரசபை முதல்வர் கூறியிருக்கும் குற்றச்சாட்டு மிக மோசமான இட்டுக்கட்டப்பட்ட பொய் என வடமாகாண பேரவை தலைவர் சீ.வி. கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இன்று காலை மாகாண பேரவைச் செயலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், பேரவை தலைவர் ஆகியோரின் வாகனங்கள் கொள்வனவுக்கு சுமார் 50 மில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், உறுப்பினர்களுக்கான வாகனங்கள் இரண்டரை வருடங்களுக்குப் பின்னரே வழங்கப்படும் என உள்ளுராட்சி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளது. யாழ்.மாநகரசபை முதல்வர் 65லட்சம் ரூபா செலவில் முன்னர் ஒரு வாகனத்தை வாங்கியிருந்தார். அந்த வாகனத்தை விபத்திற்குள்ளாக்கி அந்த விபத்து தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்த வாகனத்திற்கான காப்புறுதியையும் பெற்றுக் கொண்டு, மேலதிகமாக 13 லட்சம் ரூபா கொடுத்து இப்போது 78லட்சம் ரூபாவுக்கு வாகனம் ஒன்றினை வாங்கியிருக்கின்றார்.

ஆனால் எமக்கு ஒதுக்கப்பட்ட 70லட்சம் ரூபாவில் 58லட்சம் ரூபாவுக்கான வாகனத்தை மட்டுமே வாங்கியிருக்கின்றோம். மிகுதி பணத்தை நாங்கள் மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிட இருக்கின்றோம். எனவே உன்மையில் சுகபோகத்தை யார் அனுபவிக்கின்றார்கள் என்பதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

மேலும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு இரண்டரை வருடங்கள் பூர்த்தி செய்த பின்னரே வாகன வரி விலக்கு பத்திரம் அவர்களுக்கு வழங்கப்படும் என உள்ளுராட்சி அமைச்சு சுற்றறிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் மிக பொய்களை கூறி மக்களை திசை திருப்ப முனையும் யாழ்.மாநகரசபை முதல்வரின் நோக்கத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். மேலும் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைச்சர்கள் மற்றும் நான் உள்ளிட்டோர் பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் இரவல் வாகனங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*