பேருவளையில் வர்த்தக நிலையம் தீ வைப்பு மீண்டும் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பேருவளையில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் தீ வைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அப்பகுதியில் மீண்டும் கடும்    new-Gifபதற்றம் ஏற்பட்டுள்ளது.

பேருவளை அம்பேபிட்டிய பகுதியில் அமைந்துள்ள புத்தக விற்பனை நிலையம் ஒன்றின் மீது நேற்றிரவு தீ வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தகவலையடுத்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக ஏனைய வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

சம்பவத்தையடுத்து விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் பாதுகாவலில் ஈடுபடுத்தப்பட்டனர். அதன் காரணமாக இன முறுகல் நிலை ஏற்படும் அபாயம் தவிர்க்கப்பட்டது.

எனினும் தீ வைப்புச் சம்பவத்தைக் கேள்வியுற்று அப்பகுதிக்கு விரைந்து வந்த முஸ்லிம் இளைஞர்களை, அதிரடிப்படையினர் தாக்கமுற்பட்டதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களை அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள பள்ளிவாசல் நிர்வாகம், உலமாக்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் ஊடாக பதற்றத்தை தணிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

 

.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*