மட்டக்களப்பில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.   new-Gif

மட்டக்களப்பு திருமலை வீதி ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு எல்லையில் மோட்ட சைக்கில் ஒன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதிக்கொண்டதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று புதன்கிழமை காலை 8.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஏறாவூர் பிரதேச செயலகத்தில் கடமைபுரியும் வெளிக்கள உத்தியோகத்தர்களான சமீம் (காணி உத்தியோகத்தர்) ஜலில் (விளையாட்டு உத்தியோகத்தர்) ஆகியோரும் துவிச்சக்கர வண்டியை செலுத்திச்சென்றவருமே படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அதில் துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பிலான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*