மூடுவிழா காணும் இந்த விண்ஆம்ப்

கணனிகளில் பாடல்கள் விரும்பிக் கேட்பவர்களுக்கு கண்டிப்பாக விண் ஆம்ப் பிளேயரை தெரியாமல் இருந்திருக்காது.   new-Gif
எம்.பி. 3 பாடல்களைக் கேட்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு அமையான மீடியா பிளேயர் விண் ஆம்ப்.
எம்.பி. 3 பாடல்கள் மட்டுமல்ல… இணைய வானொலிகள் மற்றும் இணையத்தில் உள்ள பாடல்களை  கேட்பதற்கும் இந்த வீடியோ பிளேயர் பயன்பட்டது.

விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் தற்கால முன்னணி மீடியோ பிளேயர்களின் துரித வளர்ச்சி, விண்ஆம்ப் மீடியா பிளேயரை ஓரங்கட்டிவிட்டது என்று கூறலாம்.

கடந்த சில வருடங்களாகவே இதன் பயன்பாடு குறைந்திருந்த நிலையில் தற்பொழுது இந்த மீடியா பிளேயர் தரவிறக்கம் செய்யும் வசதி, மற்றும் அதற்கான இணையதளம் மூடப்படும் என அறிவிப்பட்டுள்ளது.
இம்மாத இருபதாம் தேதி வரைக்கும் மட்டுமே தனது சேவை கிடைக்கும் என அந்நிறுவனம் இறுதியிட்டுள்ளது.
விண்டோஸ் கணனிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த பிளேயரானது, படிப்படியாக மற்ற இயங்குதளங்களிலும் செயல்படுமாறு மேம்படுத்தபட்டது.
உலகின் மிகப் பலரால் தரவிறக்கம் செய்யப்பட்டு , பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த இந்த விண்ஆம்ப் மீடியா பிளேயரை உருவாக்கியவர்கள் ஜஸ்டின் பிராங்கல், டிமிட்ரி போல்டிரெவ்.
இந்த மீடியா பிளேயரானது எம்பி3 பார்மட்களை சப்போர்ட் செய்தது. பிறகு பல்வேறு ஆடியோ பார்மட்களாக MP3, MIDI, M4A, WAV, WMA ஆகியவற்றையும் சப்போர்ட் செய்தது.
விண்டோஸ் கணினி இயங்குதளம் 97 இயக்கத்திற்கு வந்தபோது பெரிதும் விரும்பப்பட்ட ஒரு மீடியோ பிளேயராக  இந்த விண்ஆம்ப் இருந்தது என்றால் அது மிகையாது.
மூடுவிழா காணும் இந்த விண்ஆம்ப் மீடியா பிளேயரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை இன்னும் 18 நாட்களுக்கு, அதன் தளத்திலேயே டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.
.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*