யாழ்.தும்பளை கிழக்கு (மூர்க்கம்) கடற்கரையிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் தும்பளைப் பகுதியைச் சேர்ந்த முருகேசுப்பிள்ளை நிமல்ராஜ் (வயது 28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை வேளையில் மீன் பிடி தொழிலுக்குச் சென்றவர்கள் கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியிருப்பதை அவதானித்த அவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தமையினையடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.