வடமாகாண ஆட்சி நிர்வாகத்தில் எனது கைகள் கட்டப்பட்டுள்ளன – முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

வடமாகாண ஆட்சி நிர்வாகத்தில் எனது கைகள் கட்டப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்new-Gif தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் உடனடித் தேவைகளை இந்தியப் பிரதமர் மோடி அடையாளம் கண்டுள்ளார். இவை குறித்து இலங்கைத் தலைவர்களிடம் அவர் வலியுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது. இனிமேல் இலங்கை அரசுதான் செயல்பட வேண்டும் என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, டெல்லியில் அண்மையில் சந்தித்துப் பேசியபோது 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
1987ல் இந்தியா- இலங்கைக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி 13வது சட்டத் திருத்தம் உருவாக்கப்பட்டது.

கடந்த 2010ம் ஆண்டில் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் ஆகியோரிடம் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த ஜனாதிபதி ராஜபக்ச உறுதியளித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட வடக்கு முதல்வர், ஆட்சி நிர்வாகத்தில் எனது கைகள் கட்டப்பட்டுள்ளன, வடக்கு மாகாணத்தில் குவிக்கப்பட்டுள்ள இராணுவப் படைகளால் நிர்வாகத்துக்கு பெரும் தடை ஏற்பட்டுள்ளது.

13வது சட்டத் திருத்தம் தொடர்பாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமன்றி நாடு முழுவதும் இராணுவ தலையீடு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தற்போதைய நிலையில் வெறுப்பும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சியுள்ளன. எனினும் முழுமையாக நம்பிக்கையை இழக்கவில்லை என்றார்.
வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கூறியபோது,

எங்களிடம் எந்த அதிகாரமும் இல்லை, நிதி பற்றாக்குறையும் ஆள் பற்றாக்குறையும் பெரும் சவாலாக உள்ளன.

கடந்த 25 ஆண்டுகளாக வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடத்தப் படவில்லை. இப்போது நாங்கள் வெற்றி பெற்ற பின்னர் போதிய நிதி ஒதுக்கீடு இல்லை.

வடக்கு மாகாணத்தில் ஆளுநரே அதிக அதிகாரம் படைத்தவராக உள்ளார். அவர்தான் அதிகார மையமாக செயல்படுகிறார். அரசு ஊழியர்கள் அவருக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடக்கின்றனர் என்றார்.

முதல்வர் விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டுகளை வடக்கு மாகாண சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா மறுத்துளள்ளதுடன், வடக்கு மாகாணத்தில் நிறைவேற்றப்பட்ட 120 தீர்மானங்களில் 90 சதவீதம் ஆட்சி நிர்வாகத்துக்கு தொடர்பில்லாதவை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*