தெல்லிப்பழையில் மிருகபலிக்கெதிராக போராட்டம்!

சர்ச்சைக்குரிய ஆலய மிருகபலியை நிறுத்துமாறு கோரி, தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவிலுக்கு    new-Gifமுன்பதாகஇன்று வெள்ளிக்கிழமை காலை முதல் உண்ணாவிரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. நேற்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் விடுக்கப்பட்ட அறிவிப்பின் தொடர்ச்சியாகவே இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அறவழி போராட்டக்குழுவின் அமைப்பாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தம்,  அறவழி போராட்டக்குழுத் தலைவர் சிறீ.சக்திவேல், அமைப்பின் செயலாளர் எஸ்.தங்கராசா, யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் சிவனேந்திரா சைத்தனிய சுவாமி, சிவன் மானிட மேம்பாட்டு நிறுவனத்தலைவரும் சைவ மகாசபைத் தலைவருமான க.கலியுகவரதன் ஆகியோர் இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கீரிமலை, கவுணாவத்தை நரசிம்ம வைரவர் கோவிலில் வருடா வருடம் மேற்கொள்ளப்பட்டுவந்த வேள்வியை நிறுத்துமாறு  மல்லாகம் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை பொதுமகன் ஒருவர் வழக்குத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா, இந்த வேள்வியை நடத்துவதற்கு சட்டக் கட்டுப்பாடுகள் விதித்து புதன்கிழமை (11) தீர்ப்பளித்தார்.

எனினும் கூட்டமைப்பு வசமுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை மிருகபலிக்கான அனுமதியினை வழங்கியுள்ளது.அத்துடன் வாக்கு வங்கி அரசியலிற்காக இவ்விடயத்தினில் மௌனம் காத்துவருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
.qwerr
pouuiu
.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*