வடக்கு மாகாண சபையின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் பார்வையிட முடியும்

வடக்கு மாகாண சபையின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை new-Gifதொடக்கம் பார்வையிட முடியும் என வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.வடக்கு மாகாண சபையின் உத்தியோக பூர்வ இணையத்தளமான www.np.gov.lk துனிசியா நாட்டைச்சேர்ந்த அரேபிய இணைய ஊடுருவல்களினால் நேற்று முன்தினம் முடக்கப்பட்டது.

அதனையடுத்து ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் இணையத்தளத்தை பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாண சபையின் இணையத்தளமானது வடக்கு மாகாண ஆளுநரின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்தும் இயங்கிவருகின்றது. இந்தநிலையில் குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 2வாரங்களுக்கு முன்னர் மாகாண சபையின் உப முகவரிகள் முடக்கப்பட்டது. அதனையடுத்தே முழுமையான முடக்கல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.
600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*