புலத்தில் இருக்கும் எம் உறவுகள், தாயகத்தில் இருக்கும் மக்களை கைவிடாதீர்கள். ஆனால் சிங்களத்தின் வலைக்குள் விழுந்து விடாதீர்கள் – கடிநொடி

பசில் ராஜபக்சா கனடியத் தமிழரை அன்பாக அரவணைத்து “நரி” இராஜதந்திர நகர்வுகளை நகர்த்தும் பொழுது,new-Gif ஏன் கோத்தபாஜ ராஜபக்சா கடுமையாக புலத்தில் இருக்கும் தமிழ் அமைப்புகளையும் மற்றும் ஈழ செயற்பாட்டாளர்களையும் தடை செய்துள்ளதன் காரணம் தான் என்ன ?

வருடம் 2009ற்கு பிறகு வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களிற்காக செய்யப்படும் எந்த வேலைத்திட்டமாக இருந்தாலும் பசில் ராஜபக்சாவிற்கு தெரியாமல் இலங்கையில் எதுவும் நடைபெற வாய்பில்லை. எதோ வகையில் பசில் அமைச்சகத்தின் அணுசரனையோடு தான் நடைபெற்று வருகின்றது. எம் ஈழ உறவுகளிற்கு சிங்களம் தன் உதவிகளை கொடுக்காமல், புலத்தில் இருக்கும் எம் உறவுகளை உதவி செய்ய வைத்து, மேற்குலக நாடுகளிடமிருந்து சிங்களம் தன்னை நல்லவர்களாக காட்டிக் கொண்டு வர முயற்சித்து வருகின்றது.

கடந்த 3 வருடங்களாக கனடாவில் கல்வி கனெக்ஷன்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் “GALA இராப்போசன விருந்து 2014” நிகழ்வு நடைபெற்றது. தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவதையே தனது கடமையாகக் கொண்டு உழைத்து வரும் வவுனியா மருத்துவமனை மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள் இம்முறையும் இந்நிகழ்வினில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்கள் கடமை தவறாத ஒரு “கர்ம வீரன்”, சிங்களத்தால் நடத்தப்பட்ட முள்ளிவாய்கால் இனப்படுகொலையின் போது காயப்பட்ட மக்களை மருத்துவம் செய்து காப்பாற்றிய நல்ல மனிதன். கடிநொடியாகிய நாம் அவரை எப்பொழுதும் தலை வணங்குவோம்.

கனடாவில் கல்வி கனெக்ஷன்ஸ் அறக்கட்டளைக்கு, கனடியத் தமிழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பணத்தை தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு உதவித் தொகையாக கொடுக்கப் படுகின்றது என்று இந்த அமைப்பாளர்களான சசி குணரட்ணம், குணா நாகலிங்கம் அவர்கள் ஊடகங்களிற்கும் அறிவித்து இருந்தார்கள்.

ஆனால் கடிநொடிக்கு கிடைத்த உண்மைத் தகவலின் படி, பாதிக்கபட்ட மாணவர்களிற்கு கொடுக்கப்படும் பணத்தை, அந்த மாணவர்கள் எதிர்காலத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டுமாம் இந்த கல்வி கனெக்ஸ்சனுக்கு. ஆனால் இந்த பணம் முழுவதும் கனடாவில் வாழும் தமிழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் நிதி.

இது உண்மையில் மனிதநேயத்தோடு செய்யும் அறக்கட்டளையின் சேவையா அல்லது முழுமையான வங்கி வியாபாரத் தந்திரமா ?

இந்த கல்வி கனெக்ஸ்சனுக்கு பக்க பலமாக இருக்கும் ஊர்ச் சங்க அமைப்புகள், இவர்களிடம் கடந்த 3 வருடங்களாக தாயக மாணவர்களிற்கு உதவி செய்யும் நிதிக் கணக்குகளை மக்கள் பார்வைக்கு காட்டுங்கள் என்று கேட்கும் பட்சத்தில், இந்த அமைப்பை நடத்துபவர்கள் அதை தாம் காட்ட முடியாது என்று கூறியுள்ளார்கள், ஏன் என்றால் மாணவர்களின் பாதுகாப்பு காரணமாம்.

கடிநொடிக்கு சிரிப்பு சிரிப்பாக வருகின்றது. சிங்கள புலனாய்வாளர்களின் காதில் பூவைத்து விட்டு கடந்த 3 வருடங்களாக இலங்கைக்குள் கல்வி கனெக்ஸ்சன் அமைப்பாளர்கள் வேலை செய்கின்றார்கள் என்றால் அவர்கள் எங்கேயோ இருக்க வேண்டியவர்கள். ஆனால் கடிநொடிக்கு உங்களின் பூக்கள் தேவையில்லை.

கடிநொடிக்கு ஒன்றுமாக விளங்கவில்லை, இந்த கல்வி கனெக்ஸ்சன் அமைப்பினர் எமக்கும் மற்றும் மக்களிற்கு விளக்கம் தாங்களோன்.

மருத்துவர் சத்தியமூர்த்து அவர்கள் வவுனியா மருத்துவனையின் முக்கிய பொறுப்புகளுடன் கடமையாற்றுபவர். இந்த மருத்துவமனையும் சிங்கள அரசாங்கத்திற்கு உட்பட்டது. அவரும் சிங்கள அரசாங்கத்தில் ஊதியம் பெறும் மருத்துவர். கண்டிப்பாக சிங்கள அரசாங்கத்தின் சட்டத்திற்கு அமையத் தான் இவரும் இலங்கைக்குள் இருந்து செயற்பட முடியும்.

ஆனால் மருத்துவர் சத்தியமூர்த்தி அவர்களை கடந்த 3 மூன்று வருடங்களாக கனடாவிற்கு கூப்பிட்டு நிதி சேகரிக்கும் கல்வி கனெக்ஸ்சன் நிகழ்வில், சிங்கள அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பல புலத்தில் இருக்கும் அமைப்பினர்கள் இந்த நிகழ்வின் புகைப்படங்களிற்கு போட்டி போட்டு தங்களை வியாபார விளம்பரம் கொடுக்கும் போது, சிங்கள அரசாங்கம் மருத்துவருக்கும் மற்றும் மாணவர்களிற்கு உதவி செய்யும் அமைப்பினருக்கும் சிக்கலை ஏற்படுத்த மாட்டார்களா ?

இது பசில் ராஜபக்சாவின் பச்சைக் கொடியா அல்லது கோத்தபாஜவின் சிகப்புக் கொடியா ?

இந்த கல்வி கனெக்ஸ்சனின் முக்கிய அமைப்பாளர்கள், இணையதளமான (தமிழ் CNN) னின் முக்கிய விளம்பரத்தாரர்கள். சிங்கள புலனாய்வாளர்களின் உதவியுடன் நடைபெறும் இந்த இணையதளத்தின் உரிமையாளர் கனடாவை சேர்ந்த பீஸ்சா விங்ஸ் அகிலன் பல மாதங்களாக இலங்கையில் இருந்து கொண்டு சிங்கள அரசாங்கத்தை விமர்சிக்கும் செய்திகளை வெளியிடுவது சாத்தியமா ?

இந்த கல்வி கனெக்ஸ்சனில் இருக்கும் அமைப்பாளர்கள் ஏன் சிங்கள புலனாய்வாளர்களால் நடத்தப்படும் (தமிழ் CNN) இணையதளத்தை ஊக்கப்படுத்துகின்றார்கள்.

இதுதானா அந்த பழமொழி ” ஊரார் பிள்ளையை ஊட்டி வளத்தால் தன் பிள்ளை தானாக வளரும்”.

புலத்தில் இருக்கும் எம் உறவுகள், தாயகத்தில் இருக்கும் மக்களை கைவிடாதீர்கள். ஆனால் சிங்களத்தின் வலைக்குள் விழுந்து விடாதீர்கள்.

கடிநொடியாகிய நாம் சிங்களம் போடும் சதி வேலைத் திட்டங்களை மக்களிற்கு தெரியப்படுத்த தயங்க மாட்டோம் எந்தக் காலத்திலும்.

கடிநொடி எங்கும் செல்லும் எதிலும் நுழையும் ஆனால் உண்மைகளை மட்டும் வெளிக்கொண்டு வரும்.

நன்றி, கடிநொடி (Facebook ID : KadyNody)

தமிழ் இனம் வாழ்க. தமிழன் வாழ்க

 

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*