மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டுப்பிடிப்பவர்கள் நடமாடுவதற்கு தடை

வலி.தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டுப்பிடிப்பவர்கள் நடமாடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் தி.பிரகாஸ் தெரிவித்துள்ளார்.    new-Gif

இதன்படி குறித்த பிரதேசத்துக்கு உட்பட்ட சந்தைகளில் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் கண்காணிப்பதற்கும் பிரதேச சபையினால் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறு மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மற்றும் சீட்டுப் பிடிப்பவர்களின் நடவடிக்கைகள் காரணமாக சந்தை வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சந்தையில் அதிகளவிலான பொதுமக்கள் கூடியிருக்கும் வேளையில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் வியாபாரிகளை மரியாதைக் குறைவாகப் பேசுவதனால் வியாபாரிகள் தற்கொலை செய்தல் மற்றும் தொழிலில் இருந்து நீங்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
அண்மையில் இத்தகைய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்மையினால் அதனைக் கருத்திற்கொண்டு இந்தக் கட்டுப்பாட்டை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
.
600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*