வள்ளிபுனம் பகுதியில் நேற்றிரவு குடும்பப் பெண் மரணத்தில் சந்தேகம்

முள்ளியவளை, வள்ளிபுனம் பகுதியில் நேற்றிரவு குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது     new-Gif  வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். வரதராஜன் துஷாந்தி (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தனது மனைவி உயிருக்குப் போராடுவதாக இவரது கணவர் அயலவர்களுக்குக் கொடுத்த தகவலையடுத்து அயலவர்கள் அங்கு சென்று பார்த்த போது அவர் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அயலவர்கள் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றபோது ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி குடும்பத்தகராறு இடம்பெறுவதாகவும் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக அவரது சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*