வரலாற்று புகழ்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று

வரலாற்று புகழ்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று new-Gifதிங்கட்கிழமை இரவு ஆரம்பமாகி நாளை செவ்வாய் அதிகாலை பொங்கலுடன் நிறைவு பெறவுள்ளது.

இம்முறை கண்ணகை அம்மன் வருடாந்த உற்சவத்தில் பெரும் எண்ணிக்கையான தென்பகுதி பக்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, கிழக்கு மாகாணம் உட்பட நாட் டின் பல்வேறு பகுதிக ளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 30 ஆம் திகதி பாக்குத் தெண்டல் வைபவத்துடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமானது.

இவ் உற்சவத்தின் பிரதான அம்சமான பொங்கல் திருவிழா இன்று இரவு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வவுனியா, கிளிநொச்சி, மன்னார்,

யாழ்ப்பாணம், காரைநகர், பருத்தித்துறை டிப்போக்கள் விசேட பஸ் சேவைகளை ஏற்பாடு செய்திருப்பதுடன், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் ஆலயத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

பக்தர்கள் நேர்த்திக்கடன் மற்றும் வழிபாடு செய்யவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

vatrapalai kovil 8x4

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*