காதல் கவிதை – என்னை மறக்கடித்தவளே!

என்னை மறக்கடித்தவளே!slide8
என்னை மறந்தாலும்
உன்என்னை மறந்துவிடாதே!

கண்களால் நான் சொல்வது

காதல் காதல் என்றறிந்தும்
உணர்வின்றி உணர்ச்சியின்றி
ஒன்றும் அறியாதவளாய்ப் போகையில்
எப்படிச் சொல்வேன்? – நான்

உன்னைக் காதலிக்கிறேன் என்று.

கவிதையின் சித்திரமே
கடந்த காலம் இறந்த காலம்தான்
ஆனாலும் அன்பே
நான் உயிர்வாழ்வதே
love2நீயிருந்த இறந்தகாலத்தில்தான்!
இராவெல்லாம் துயில்பவளே
ஒருநாள் விழித்திருந்து பார்
அப்போதுதான் உணர்வாய்
எப்போதும் உறங்காமலிருக்கும்
உணர்ச்சிகளின் கொடுமையை.
உறங்காமலிருக்கும் நான்
ஒருமுறை உறங்குவேன்
நாட்கள் முழுதும்
விழியா உறக்கம்!
என்னவளே!
இல்லை இல்லை
யார் அவளே
இனியாவது பர்தா
அணிந்துகொள் பெண்ணே!
என்னைப்போல்

இன்னொரு கவிஞன் வேண்டாம்!

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*