இந்தியாவில் தலை ஒன்று வயிற்றில் இணைக்கப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்தியாவில் தலை ஒன்று வயிற்றில் இணைக்கப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சத்திர சிகிச்சை மூலம் அந்த தலை அகற்றப்பட்டது.    new-Gif
இந்த பெண் குழந்தை பிறக்கும் போது ஒட்டுண்ணித்தனமான இரட்டை தலைகளில் ஒன்று வயிற்றில் இணைக்கப்பட்டிருந்துள்ளது. இக் குழந்தை ஒரு சிறிய அரச மருத்துவ மனையில் மே மாதம் 13-ந் திகதி பிறந்தது.
பிறந்த உடனே வட இந்தியா. ஜெய்பூரில் உள்ள JK Lone Hospital கொண்டு செல்லப்பட்டுள்ளாள்.
வைத்தியர் குழு ஒன்று சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக தலையை வயிற்றில் இருந்து பிரித்து எடுத்துள்ளனர். இந்த தலையானது பூரணமாக உருவாக்கப் பட்டு கழுத்தால் வயிற்றில் இணைக்கப் பட்டிருந்துள்ளது.
சமமற்ற வளர்ச்சி கூறுகள் கொண்ட ஒட்டுப்பிறவிகள் என இது கூறப்படும்.

குழந்தைக்கு 45-நாட்களின் பின்னர் மீண்டுமொரு சத்திர சிகிச்சை செய்யவேண்டுமெனவும் அதன் பின்னர் பூரண ஆரோக்கியத்துடன் எதிர்காலத்தில் எந்தவித மருத்துவ சிக்கல்களும் இன்றி இருப்பாள் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பெண்குழந்தை 4-இறாத்தல் 8-அவுன்ஸ் எடையுடன் இயல்பாக பிறந்துள்ளது. பிறந்த உடன் மஞ்சள் காமாலை நோய் வந்தகாரணத்தால் சத்திரசிகிச்கை தாமதமாகியது.

 

baby1

baby

baby2

 

.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*