15 வயது சிறுமியை 10 ஆண்டுகளாக கடத்தி கற்பழித்த காமுகன்

அமெரிக்காவில் கடத்தி சிறை வைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்ட பெண்ணொருவர் பத்து   new-Gifஆண்டுகளின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள சான்டா அனா பகுதியை சேர்ந்தவர் கார்சியா (41). இவர் லாரா என்ற 15 வயது சிறுமியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கடத்தி, தனிமையில் சிறை வைத்தார்.

சிறுமி லாராவின் தாயாருடன் அவர் காதலராக சேர்ந்து வாழ்ந்த போது அவளை கடத்தி சென்றார்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு லாராவை கலிபோர்னியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.  பேஸ்புக் மூலம் தனது சகோதரியுடன் தொடர்பு கொண்ட லாரா தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அவரை மீட்ட பொலிஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

அதாவது, கடத்தி சிறை வைக்கப்பட்ட லாராவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கார்சியா வற்புறுத்தி வந்தார். அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். மேலும் அவளை பலமுறை கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் காரணமாக அவளுக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது. பலமுறை தப்பிக்க முயன்றும் தன்னால் முடியவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்தது.

அதை தொடர்ந்து கார்சியா கைது செய்யப்பட்டார்.

kidnapped_child_001

kidnapped_child_002

.600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*