வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு அஞ்சலி

வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.    new-Gif

வடக்கு மாகாண சபையின் 9ஆவது அமர்வு கைதடியில் உள்ள சபை கட்டடத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.அதன்போது உறுப்பினர்களால் சபையில் கறுப்புப்பட்டி அணிந்து தீபமேந்தி அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர் ரயீஸ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

மேலும்  எதிர்க்கட்சித் தலைவர்  தவராசா வெளிநடப்பு செய்திருந்தார். எனினும் அவைத்தலைவர் இவ்வாறான செயற்பாடுகளில் கலந்து கொள்ள முடியாது என்பதால் கலந்து கொள்ளவில்லை.

அத்துடன் சபையின் அஞ்சலி உரையினை வடக்கு முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்,விந்தன் கனகரத்தினம், லிங்கநாதன்,பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் , அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் எதிர்க்கட்சி தவைலர் தவராசா ஆகியோரும் உரையாற்றினர்.

இதன்போது இறந்தவர்கள்  அனைவருக்கும் அஞ்சலி செலுத்த வேண்டியது எமது பொறுப்பு என்றும் எந்த அடக்கு முறைக்குள்ளும் நாம்  எமது உறவுகளை நினைவு கூருவோம் என்பதை தெட்டத் தெளிவாக சபையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

.600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*