இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் உஷாளினி. பெற்றோரால் அடையாளம் காணப்பட்டார்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ஜந்தாம் ஆண்டின் நினைவு கூரல் காலப்பகுதியில் வெளியிடப்பட்டnew-Gif போர்க்குற்ற சாட்சியப் புகைப்படத்திலுள்ள மற்றைய பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இறுதிப்போரில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்ட இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவர் மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் அடையாளப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பில் உஷாளினியின் பெற்றோர் தெரிவிக்கையில் ‘இறுதிப்போரின் போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள் உஷாளினி 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற் போயிருந்தார்.

மீள் குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமற்போனமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தோம்.

இந்த நிலையில் நேற்று ஊடகங்களில் வெளியாகிய புகைப்படத்தில் இசைப்பிரியா என்ற போராளிக்கு அருகில் எமது மகள் இருப்பதை நாம் அடையாளம் கண்டோம் என தெரிவித்துள்ளனர்.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*