விடுதலைப்புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்படவில்லை:சம்பிக்க ரணவக்க

விடுதலைப்புலிகள் அமைப்பு இதுவரை முற்றாகத் தோற்கடிக்கப்படவில்லை  என்று    new-Gifஅமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கிருந்தபடி நாட்டு நடப்புகள் தொடர்பாக லங்காதீப சிங்கள ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இராணுவ, அரசியல், கருத்தியல என்று முப்பிரிவுகளைக் கொண்ட உலகின் பலம்வாய்ந்த ஒரு போராட்ட இயக்கம்.

அந்த வகையில் தற்போது விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவு மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன் அரசியல் மற்றும் கருத்தியல் பிரிவுகள் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.

அதன் காரணமாகவே புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சார்பான போராட்டங்கள் மற்றும் ஆதரவுத் தளம் என்பன தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றது.

விடுதலைப் புலிகளின் இந்த இரண்டு பிரிவுகளையும் இலங்கையால் இதுவரை தோற்கடிக்க முடியவில்லை. இனிவரும் காலங்களிலும் அது சாத்தியப்படுவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

ஏனெனில் வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கம் என்னதான் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தாலும், அங்குள்ள மக்கள் அனைவருமே தனிநாடு ஒன்றைப் பெற்று பிரிந்து செல்லும் ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புடனேயே இருக்கின்றனர் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

 

.600x150-GIF1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*