தன்மானமும், வீரமும் – வெளிறாத நம்மவர் வீரத்தின் வீராப்பால்…

முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்! வெள்ளையனோடு வெளிறிப் போனது வெண்ணிறமான நம்மவர் வாழ்வின் சாயமது..! வெதும்பிப் போனது ஜே.ஆர் உடன் வெண்ணெயைப் போன்ற நம்மவர் வெண்மனதும்தான் – ஆனாலும் வெளிறவும் இல்லை, வெதும்பவும் இல்லை ஒருபோதும் வெண்மையான நம்மவரின் தன்மானமும், வீரமும்!

 

 வெளிறாத நம்மவர் வீரத்தின் வீராப்பால்…                                       new-Gif

வெருண்டு போன ஊனவர்கள் வெளி தேசம் சென்று
வெம்பி அழுது புலம்பி நின்றனர் வெளி வேசத்தோடு
வெம்பலின் வெளிப்பாட்டில் நீதியும் செத்தது!!!
வெளிநாட்டினரும் வேடனாயினர் எமக்குஇ
வெள்ளாடுகள் ஆனோம் இங்குள்ள நரிகளுக்கு!!!

உலகிற்கு உணவூட்டி உயிர் காத்த
உழவனையும் உழுது பிசைந்திட
உலகையே கூட்டி ஆணவத்தோடு
ஊரேறி காவுகொள்ள வந்தது ஈனப்படை..!

உக்கிரப்படையோடு அநீதியாக வந்த
உலகபலம்இ உக்கிரப்படைக்கு உரமேற்ற
உதிரம் பாய முள்ளிவாய்க்கால் மண்ணிலே – எம்மவரை
உதிர்த்திப் போட்டனரே இரக்கமற்று..!

உதிர்ந்ததில் நாமிட்ட ஓலத்தால்
உலகெங்கும் எழுகின்ற புரட்சிகள்
உலகையே உருக்குலைத்து விடுமோ என்று
உலகே உலுங்கி நிற்கிறது இன்று.!

இலங்கையின் கிழக்கு கடற்கரைச் சாலையில்
இலங்கையின் கோரப்படை நடத்திய
இரக்கமற்ற கோரத் தாண்டவத்தால்
இலைகள் உதிர்ந்து வாடிய இயற்கைக்கு
இரக்கத்தோடு இரத்தத்தை எம்மவர் உரமாக்கினர்
இணக்கத்தோடு வேர்களுக்கு கண்ணீரையும் நீராக்கினர்.

நீதியைக் கொன்று எமை விழுங்கிட வந்த
அநீதிப் படையோடு மாசற்ற நம் வீரப்படை
நீதி தவறா நெறியுடன் களமாடினர் அன்று – ஆனாலும்
நீதியை சூது காவு கொண்டு போனதே.!!!

மூன்று தசாப்தம் கடந்த பின்னர்
முள்ளிவாய்க்கால் மண்மீது முத்தமிட்டு
முத்திரை பதித்துச் சென்றனர் நம் வீரப்படை அன்று.!
முதுகு காட்டாத மண்டியிடா வீரத்தால்இ
முகத்திரை கிழிந்தது சிங்களத்திற்கு இன்று.

முளைத்து வருவோம் வீறுடன் மீண்டும்
முன்னோர் வழியில் முறை தவறாமல்.
முள்ளிவாய்க்கால் மண்ணே கலங்காதே!
மூத்த குடிகள் முளைத்திடுவோம் செழிப்பாக…

இரத்தத்தால் ஈரமான ஈழமண்ணைப் பார்ப்பதற்கு
இறக்கை அறுந்து கண்ணீருடன் நம்மவர் இன்று
ஈரம் காயும் முன்னே ஈழமண்ணைக் கண்டிடுவோம்
ஈர மனம் படைத்திட்ட எம்மவரே..!
இளகி விடாதீர்கள் இரக்கமற்ற கயவனிடம்
இன்றும் ஈழம் ஈரமாகத்தான் உள்ளது.!

முள்ளிவாய்க்காலிலே அள்ளிப்புதைத்த நீதி
மூச்சாக வீறு கொண்டு நிற்கிறது மூளையிலே
சாகவில்லை நம் வீரம் இப்புவிதனிலே
சரித்திரத்தை படைத்து நிற்கிறது வீறுடன்!!
வலிகளால் வழிகளை நாம் கண்டு கொண்டோம்
வழி சமைப்போம் நம் ஈழம் வாழ்வதற்கு..!

-ஆக்கம்: ஈழச்சத்ரியன்

 

.600x150-GIF1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*