சிறப்புப்பார்வை – வைகாசி 18 சிந்திய குருதிக் கறைகள்

தமிழீழ தாயகக் கோட்பாடு அதற்கான விடுதலைப் போராட்டம், பிரிவினைவாத சிந்தனை என்பன பூண்டோடு அழிக்கப்பட்டதாக…   new-Gif

…சிறீலங்கா பேரினவாதமும் அதற்குத் துணைபோகும் துணைக் குழுக்கள் மற்றும் பிராந்திய தேசங்களும் பல முறை கொக்கரித்ததாலும் வருடா வருடம் மீண்டும் மீண்டும் திடுக்கிட்டு எழுந்து கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளது ஏன் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒன்று. அவ்வாறான அசர இயந்திரம் இருட்டப்பட்ட நிலையில் தற்போதய தாயக நாட்கள் நகர்கின்றன.

அண்மையில் தமிழ் மக்களை அல்லாட்டிய விடுதலைப் புலிகளின் மீள் இணைவு நாடகம் இன்னும் ஓயாது கடத்தலும், கைதும், கைதுக்கான விளக்கங்களும் தொடர்கையில் தற்போது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த நாளான வைகாசி 18 காச்சல் சிறீலங்கா பேரினவாத ஆட்சியாளர்கள் மற்றும் படையினருக்கு பீடித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழகம் மூடல், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் பிரசுரங்கள் இதற்கு மேலாக ஒட்டுமொத்த கல்விச் சமூகம் மற்றும் தமிழ் சமூகத்துக்குச் சிறீலங்காப் படை விடுக்கும் அச்சுறுத்தல் அடாவடி என்பன சிறீலங்காவின் ஆழ் கருத்தில் எவ்வாறு தமிழ் ஈழக் கொள்கை பதிந்துள்ளது என்பதற்கு சான்றாகும்.

தமிழீழ விடுதலைக்காய் உயிர் தியாகம் செய்தவர்களிள் ஆன்ம ஈடேற்றத்துக்கான பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளில் இருந்து அவர்களுக்கான நினைவு கூரல்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் இதையும் மீறி நினைவுகூரல்கள் மற்றும் பிரார்த்தனைகள் செய்வோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடாத்தப்படுவார்கள் என யாழ்ப்பாண பிரதி காவல்துறை மா அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையானது தமிழ் மக்களை விசனமடைய செய்துள்ளது.

மனித இனம் கூர்ப்பின் பாதையில் முன்னிற்கு ஒரு முக்கிய காரணமாக மானிடவியலாளர்களால் கூறப்படும் விளக்கங்களில் ஒன்றான இறந்தவர்களுக்கான மரியாதை மற்றும் சடங்குகள் பற்றி அன்புமதமான பௌத்தத்தால் ஆட்கொள்ளப்பட்ட இலங்கையிலுள்ள வெறும் 1.5 கோடி சிங்களவர்கள் புரிந்து கொள்ளாமையிட்டு தமிழ் மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டாலும் தம் உயிர் நீத்த உறவுகள் உள்ளக் கோயில்களில் இருத்தி வழிபடத் தடையேது என்னும் துயரோடு கூடிய ஆசுவாசப்படுத்தலுடன் உள்ளனர். மட்டுமன்றி புலத்தில் இன்னும் எம் தாயக கோட்பாடடையும் விடுதலைப்பயணத்தைமயும் சந்ததிகள் தாண்டி கொண்டு நடாத்த இளையோர் படையணி உள்ளது என்னும் ஆசுவாசத்துடன் வடிவங்கள் மாறினும் இறுதி இலக்கென்றும் ஒன்றென்று அவர்கள் நடப்பதும் ஈழத்தின் விடுதலைக்காய் அலையும் ஆன்மாக்களை ஈடேற்றும் என்னும் நம்ப்பிகையும் அவர்களிடத்தில் உண்டு.

சமகாலத்தில் தமிழ் மக்களை கொன்றொழித்த சிறீலங்காப் படைகளுக்கு விழா எடுக்கும் சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களின் அமைதிப் பிரார்த்தனை மற்றும் சமய வழிபாட்டை பயங்கரவாதமாக்கும் பௌத்த தர்மத்தை அனைத்து நாடுகளும் மௌனத்தால் ஆமோதித்துள்ளன. அது தமிழ் மக்களுக்கு இவ் பூகோளத்தில் வாழ்வுரிமை மட்டுமன்றி ஆன்ம ஈடேற்றத்துக்கான இறுதி உரிமையும் மறுக்கப்பட்டுள்ளதா என்னும் கேள்விக்கு வழியிடுகின்றது.

தமிழ் மக்களின் கலாச்சார பண்பாட்டு மற்றம் அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்துள்ள இவ்வாறான நினைவு கூரல்கள் மற்றும் சமயப் பிரார்த்தனைகள் என்பனவற்றை அடக்க முனையும் சிறீலங்கா அதற்கான ஒரே காரணமாக கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக கூறிவரும் வரும் சொல்லாடல் விடுதலைப்புலிகளை நினைவுகூருதல் தடை, போராடத் தடை, பிரிவினைக்கு தடை, என பல தடைகள் கண்ட தமிழ் மக்கள் மரணித்துப்போன தம் பாசமிகு உறவுகளை மனதில் நிறுத்தி இறைவனைப்பிரார்திக்க தடுக்கும் சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் அனைத்து நிகழ்வுகளையும் தமிழ் ஈழத்துக்கான நிகழ்வாகவோ நினைவுகூரலாகவோ பார்க்கின்றது என்பதற்கு இவற்றை விட வேறு சான்றுகள் தேவையில்லை.

அது மட்டுமன்றி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் அவர்களின் வாழ்க்கையின் இயல்புகளுக்கும் மதிப்பளிக்கத் தெரியாத சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் செயற்பாடுகள் அனைத்தையும் பயங்கரவாத நிகழ்வுகளாக பார்க்கும் அளவிற்கு இன்னும் அச்சத்தில் இருக்கின்றது. அதாவது தமிழீழ விடுதலைப்புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டால் ஏன் இந்த அச்சம் என்னும் ஒரு பொதுவாக கேள்விக்கான விடை மீதான ஆவல் வருடா வருடம் அதிகரித்தே செல்கின்றது.

சிறீலங்கா அரசும் படைகளும் வெற்றி விழாக் கொண்டாட நிர்பந்திக்கப்பட்டது தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் மீதான தமது ஓட்டைகள் விழுந்த வெற்றியில் உள்ள ஓட்டைகள் சிங்கள மக்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டாது தடுப்பதை நோக்காக கொண்டது. அதாவது தேசத்தின் மகுடம் என கடந்த ஜந்து வருடங்களாக விடுதலைப்புலிகள் கைவிட்ட துரு ஏறிய போர்த் தளபாடங்களை காட்டி வீரர்களாக வலம் வந்த ராஜபக்சங்களும் படைப் போர்க்குற்றவாழிகளும் அது தொடந்தும் கைக்கூடாது என்பது புரிந்தவர்களாக மேடையேற்றிய நாடகமே மூவர்கொண்ட குழுவின் தலைமையிலான புலிகளின் மீள் எழுச்சி.

இதற்குப் பின்னால் புதைந்துள்ள உண்மைகள் வெளி வரும் காலத்தில் தமிழ் மக்கள் மீதான பன்னாட்டுக்கொள்கை மாற்றப்பட்டிருக்கவேண்டும் அன்றி சிறீலங்கா மீதான கொள்கை மாறியிருக்கவேண்டும். ஆனாலும் தமிழ் மக்களும் போராளிகளும் தமிழீழ விடுதலைக்காய் சிந்திய குருதிக் களைகள் தமிழ் மக்களின் மனதை விட்டு அகலா அதே நேரம் சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கiளும் தூங்க விடாது துரத்தும் என்பதங்கு இன்றைய நாட்கள் நான்காவது தடைவையாக சாட்சி பகிர்ந்து நிற்கின்றன.

.600x150-GIF1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*