ஜே. வி.பி நவம்பர் 13 ஆம் திகதியை அனுஸ்டிக்க முடியும் என்றால் தமிழர்கள் ஏன் அனுஸ்டிக்க முடியாது:எம்.கே.சிவாஜிலிங்கம்

ஜே. வி.பி நவம்பர் 13 ஆம் திகதியை அனுஸ்டிக்க முடியும் என்றால்     new-Gifதமிழர்கள் ஏன் அனுஸ்டிக்க முடியாது  என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
வடமாகாணசபை கட்டடத்திற்கு வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை நினைவுகூர்ந்ததினை தொடர்ந்து  ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்- 
 
‘இதே நாளில் தான் பல்லாயிரக்கணக்கான எம் உறவுகள் கொன்றொழிக்கப்பட்டனர் ஆனால்  நாம் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. 
 
இன்று இங்கு இம்மக்களை நினைவு கூர்ந்து ஏற்றப்பட்ட சுடர் தீபம் தட்டி வீழ்த்தப்பட்டு சப்பாத்துக் கால்களால் மிதிக்கப்பட்டுகின்ற ஒரு கொடிய அடக்கு முறைக்கு கீழே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
 
நாங்கள் இந்த நாட்டில் இரண்டாம் தர பிஜைகளாக வாழ்ந்து வருகின்றோம், ஆனால் நாங்கள் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல உங்களுக்கு இந்த நாடு சொந்தம் அல்ல என்பதனை இந்த இந்த சம்பவம் தெட்ட தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.  
 
இருப்பினும் இவர்கள் தடுத்தாலும் மீதமுள்ள இரு நாட்கள் மட்டும் அல்ல இந்த மாதம் பூராகவும் இத்தினத்தை அனுஷ்டிப்போம். 
 
ஏன் எதிர்வரும் 22 திகதி  நடைபெறும் வடமாகாண சபையின் அடுத்த அமர்வில் கூட அஞ்சலி செலுத்தவுள்ளோம் முடியும் என்றால் கூட்டதொடரை ஒத்திவைத்துப்பாருங்கள்  தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே என்று சவால்விடுகின்றோம் என்றார்.
.600x150-GIF1

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*