நுணாவில் மேற்கு பகுதியில் யுவதி மீது வாள்வெட்டு

யாழ். மாவட்டத்தில் நுணாவில் மேற்கு பகுதியில் வீட்டில் இருந்த பெண்ணொருவரை   new-Gifஇனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டியதில் அவர் கையில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த தர்சிகன் சாந்தினி(வயது 27) என்ற குடும்ப பெண்ணே காயமடைந்தார்.

வீட்டு வளவில் நின்ற அவரை அங்கு திடீரென வந்தவர்கள் வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த இவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

.600x150-GIF1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*