பெரம்பூரில் மாதா சிலை கண் திறந்ததா?!

பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள‌ லூர்துமாதா தேவாலயத்தில் 114–ம் ஆண்டு பெருவிழா மற்றும் 67–வது ஆண்டு தேசிய திருப்பயண விழா கடந்த 6–ந்தேதி தொடங்கியது. இன்று நடைபெற்ற‌ 5–ம் நாள் திருவிழாவில்,  கோவிலின் இடதுபுறம் கண்ணாடி பேழையில் உள்ள மாதா சிலை, காலையில் கண் திறந்து சிமிட்டியதாக சிலர் கூறினார்கள். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியவுடன், இந்த அதிசயத்தை காண அப்பகுதி மக்கள் தேவாலயத்தில் திரண்டனர்.

மாதா கண் திறந்து பார்த்ததை கண்டு சிலிர்த்து போனதாக சிலர் கூறினார்கள். திருவிழாவையொட்டி சிலையும், பேழையின் கண்ணாடியும் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் மாதா சிலை புதியதுபோல் பளிச்சென்று தெரிந்தது. இதனை திடீர் என பார்த்தவர்கள் மாதா கண் திறந்தது போன்று உணர்ந்திருப்பார்கள் என்று சிலர் கூறினர்.

madha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*