அன்னையர் தின கவிதை – உன் உயிர் தந்து என் உயிர் வளர்த்த தாயே !!

உன் உயிர் தந்து என் உயிர்  வளர்த்த தாயே !!new-Gif

தரணியில் நானும் அவதாரம் எடுத்திட துணையாய்  இருந்தவளே !!

ஈரைந்து மாதங்கள்      எனை கருவாய்    வயிற்றில்  சுமந்தவளே !!

பசியால் நீ   வாடிடும் போதும்       நான் பசியறியாது        செய்தவளே !!

நோயினால் நீ    வாடிய போதும்       என் மனம்     நோகாமல்    பார்த்தவளே !!

உன்னை என்ன     வென்று    நான் சொல்வேன்…

நீ தெய்வம் என்று        சொன்னால் கூட       உனக்கு அது  இழுக்கு தான்…!!

நீ தெய்வத்துக்கு     மேலே தான்        என் மனதில்…!!

Amma kavithai

600x150-GIF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*