10 வயதை எட்டும் பேஸ்புக் (facebook)

நியுயோக்கை  சேர்ந்த 20 வயது பல்கலைக்கழக மாணவரான marc zuckerberg   விளையாட்டாகnew-Gif பல்கலைக்கழக நண்பர்களுடன் புகைப்படங்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து  கொள்ள  ஆரம்பித்தார். அதுவே இன்று தவிர்க முடியாத சமுக வலைத்தளமாக  ( facebook ) வளர்ந்து  நிக்கிறது.

facebook சமுக வலைத்தளம் 4 பெப்ரவரி 2004ல் ஆரம்பிக்கப்பட்டது. உலகளவில் இணையம் உபயோகிப்போரின் தொகை 2.5 மில்லியாட் ஆகும்.

இதில்  ஒரு மில்லியாட் மக்கள் facebook  கணக்கு வைத்துள்ளனர். ஒரு மில்லியாட் என்பது  உலக மக்கள் தொகையில்     நான்கில் முன்று பகுதியினராகும்.

உலகில்  google க்குப் பின் அதிகம் பயன்படுத்தும் வலைத்தளமான  facebookஇன் இறுதிக் காலாண்டு வருமானம் 2.6 மில்லியாட் டொலர்களாகும். பெரும் பகுதி விளம்பரம் முலமே கிடைக்கப் பெறுகின்றது. உலகின் இளைய மில்லியாட் அந்தஸ்தும் marc zuckrberg க்கே வழங்கப்பட்டுள்ளது.

4 பெப்ரவரியில் இவருக்கு வயது 30 ஆகும்.  உலகில் facebook உபயோகிப்போரில் முதல் 10 இடங்களில்!   அமெரிக்கா முதலாவது  இடத்திலும், இந்தியா  இரண்டாவது  இடத்திலுள்ளன. பிரான்ஸ் 25 மில்லியன் பேருடன்  ஒன்பதாவது இடத்திலேயே உள்ளது.             new_facebook

facebookகணக்கு தொடங்க மிகக்  குறைந்த வயது 13  ஆகும். facebookஇன் தாக்கம்  அரிசி பாலையும் விட்டு வைக்கவில்லை . 2011 எகிப்தியப் புரட்சியின் போது facebook  சமுக வலைத்தளம் முக்கிய பங்கு வகித்தது.

இக் காலகட்டத்தில்  ஒரு எகிப்த்திய தம்பதியினர்  தங்கள் குழந்தைக்கு facebook என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
facebookபாவனை மீது பலருக்கு பலவித விமர்சனங்கள் உள்ள  போதிலும் ஒரு Likeகுக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

600x150-GIF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*