முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை பல்கலையில் அனுஷ்டிக்கமுடியாது

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை பல்கலையில் அனுஷ்டிக்கமுடியாது என யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார்.    new-Gif

 பல்கலைக்கழக துணைவேந்தர்,பீடாதிபதிகள்  மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஆகியோருக்கும் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதிக்கும் இடையிலான சந்திப்பொன்றை இன்று காலை 9 மணியளவில் காங்கேசன்துறையில் உள்ள தல் செவன இராணுவ விடுதியில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது மாணவர் ஒன்றியத் தலைவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வைக் குழுவாகச் சேர்ந்து எவரும் அனுஷ்டிக்கமுடியாது. அப்படி அனுஷ்டிப்பதாயின் அதனைத் தனித் தனியே வீடுகளில் முன்னெடுங்கள்.
 பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் வகையில் அரசியல் பின்புலங்களுடன் மாணவர்கள் செயற்படுகின்றனர். அதனால் அமைதி நிலை பாதிக்கப்படுகிறது. இத்தகைய செயற்பாடுகளை பல்கலைக்கழக மாணவர்கள் கைவிடவேண்டும்.
 அத்துடன் நீங்கள் பல்கலைக்கழகத்துக்குள் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறி பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவீர்கள். எனவே இதனை அனுமதிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
.600x150-GIF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*