காதல் கவிதைகள் – இணையத்தில் இணையும் இதயங்கள்

இணையத்தில் இணையும் இதயங்கள்   

www.yarlfmradio.com

www.yarlfmradio.com

 

விடையோடு விளையாடி
வினாத் தேடும் உலகினிலே
இணைய இடையோடு
இழையோடும் இளசுகள் நாம்…

பேஸ் புக்கின் முகத்தினையூம்
பேயறைந்து போய் பார்க்கையிலே
லைக்குகளும் கொமன்ட்ஸ்களும்
லைபோடு கலந்துவிடும்

கூகிளின் இதயத்தினுள்
கூவூகின்ற தேடல்களில்
ஆடுகின்ற மயில்களாய்
ஆர்ப்பரிக்கும் நண்பர்கள் நாம்…

வட்ஸ்அப்பில் வழுக்கி விழுந்து
வட்டங்களாய் முடிவுமின்றி
சட்டங்கள் பல வந்தும்
சதுரங்களாய் வாழ்கின் றோம்.

வைபரின் மூளையிலே    yarl 02
வைப்பிலிட்ட நம் பெயரை
நானிலமும் நிலைத்துவிட
நாளாந்தம் நனைகின்றோம்.

ஸ்கைப்பின் முத்தத்திலே
ஸ்பரிசங்கள் மறந்துவிட்டு
புஷ்பங்களை தூவி விட
புதுமையைத் தேடுகின்றோம்.

யாஹூவின் அணைப்பினிலே
யாருடனும் சேராமல்
பாரினையூம் மறந்தவண்ணம்
பாசம்தனைச் சுவைக்கின்றோம்.

நிம்புஸின் நினைப்பினிலே
நித்தமும் நித்திரையில் தாமதமாய்
சித்தமது சின்னதாய் சிதறிவிட
சிறுவனாய் மாறுகின்றோம்

ப்ரிங்கோடு பிணைந்துவிட்டு
ப்ரியமாய் பேசிவிட
காத்திருக்கும் மனைவிக்கும்
காதலும் கரைந்தோடும்…

 

.

600x150-benner1

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*