காதல் கவிதைகள் – மறந்தது என்னை என்றால்……

மறந்தது என்னை என்றால்

 

பெண்ணே….

www.yarlfmradio.com

www.yarlfmradio.com

உன் கால் கொலுசின்
முதல் சத்தம்….
உன் கண்விழியின்
முதல் பார்வை….
உன் புன்னகையின்
முதல் சுகம்…..
எனக்காக வேண்டும்.

ஏனெனில்
நான் உன்னை காதலிக்கிறேன்….

மலரின் சிரிப்பில் உன்
ஞாபகம். …..
மழலைப் பேச்சில் உன்
ஞாபகம். …..
மல்லிகை வாசனையில் உன்
ஞாபகம். …..
ஏனோ தெரியவில்லை……
என்னால் மறக்க முடியவில்லை…

எனதுயிரே…..
உன் கண்கள் பார்ப்பது
இருட்டாயிருந்தாலும் ….
அது எனக்கு மட்டுமே
சொந்தம்…..
உன் உதடுகள் உச்சரிப்பது
மவுனம் என்றாலும்…..
அது எனக்கு மட்டுமே
சொந்தம்……..

இப்படி உயிரை மறந்து
உனை நினைக்கும் ….
எனை எப்படி மறந்தாய் ?

நீ மறந்தது உன் வாழ்க்கையை
என்றால்…..
என் வாழ்வை உனக்காய்
அர்ப்பணித்திருப்பேன்…..
நீ இழந்தது
உன் பார்வையை என்றால்
என் கண்களை தானமாய்
தந்திருப்பேன்…..
நீ மறந்தது

உன் நினைவை என்றால்
என் அன்பால் உனக்கு உயிர்
கொடுத்திருப்பேன்….
ஆனால்
என்னவளே…..
நீ மறந்தது என்னையே என்றால்?

.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*