காதல் கவிதைகள் – காதல் கரம் தருவாயா……?

காதல் கரம் தருவாயா……?

விழிகளிலே வினா விடுப்பவளே….
விடை மட்டும் கூறாமல்
என்னை
வாட்டி எடுப்பவளே….
உன்னால்
இரவெல்லாம் விழிக்கிறேன்….
விடை தேடியே
விடியும் வரை
தூங்காமல் கிடக்கிறேன்…

காதல் ரணம்
தந்து செல்பவளே…..
கொஞ்சம் நில்…
காரணம் சொல்…..
நீ என்னை
கடந்து சென்றாலும்
என்னுடனே
வரும் நிழலாய்
உன்
நினைவுகள் மட்டும் ஏன்
என்னை தொடர்கின்றன….?
தொல்லை தருகின்றன….?

அடியோடு என்னை
வெறுப்பது போல்
நடிப்பவளே ….அறிவாயா…..?
உன்னை
நொடிப்பொழுதும்
நினைக்க மறந்ததில்லை
என் மனம்.

பெண்ணே
இறுதியாய் கேட்கிறேன்….
நீயும்
உறுதியாய் சொல்…..
உன்
இதயக்குழியில் விழுந்து
எழமுடியாமல் தவிக்கும்
எனக்கு
காதல்கரம் தந்து காப்பாயா…..? இல்லை
அங்கேயே எனக்கு
கல்லறை தான் அமைப்பாயா….?

.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*