பாரிஸ் லாச்சப்பலில் தமிழர் வணிக நிலையங்களில் வங்கி அட்டைகளின் விபரங்கள் திருடப்படுகின்றன

வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துபவர்களில் விபரங்கள் கமரா

www.yarlfmradio.com

www.yarlfmradio.com

மற்றும் விபரத்திரட்டு இயந்திரங்கள் மூலம் கேகரிக்கப்படுகின்றன. பின்னர் குறித்த பெயர் விபரங்களில் போலி வங்கி அட்டைகள் தயாரிக்கப்பட்டு குறித்த நபர்களின் வங்கிளிலிருந்து பணம் களவாடப்படுகின்றது.

பாரிஸ் லாச்சப்பலில் அமைந்துள்ள தமிழர் வணிக நிலையங்களில் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடுகளையும் செய்துள்ளார்கள்.

எனவே பாரிஸ் லாச்சப்பலில் அமைந்துள்ள உணவகங்கள், புடவைக் கடைகள், விமானச்சீட்டு வாங்கும் முகவராலயங்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துவோர் அவதானமாக இருப்பது நல்லது. குறிப்பாக பணம் செலுத்தும் பகுதியில் கமரா பொருத்தப்பட்டிருக்குமானால் அவ்விடத்தில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டில் 27 வயது முதல் 65 வயது வரையிலான தமிழர்கள் இவ்வாறான கடன் அட்டை மோசடிகளில் ஈடுபட்டு வந்தமை கண்டறியப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை இங்கே நினைவூட்டத்தக்கது.

.

.

600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*