யாழ்.எவ்.எம் றேடியோவின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சித்திரை

www.yarlfmradio.com

www.yarlfmradio.com

 திங்கள் ..
ஜெயமாக
விடிந்துவிட்டது…

வருடம் முழுவதும்
ஜெயமாகவே நடக்கட்டும்…
யாவர்க்கும்….
எல்லா தமிழருக்கும்…..

புத்தாண்டு என்றாலே
புதுப் புனலை எதிர்நோக்கும்
மனம் தானே…
வீசட்டும் …
மணம் வீசட்டும்..எட்டு திக்கெங்கும்…

மும்மாரி பொழிந்து
விவசாயி சிரிக்கட்டும்…Tamil new year 2014
அவர் சிரிச்சால் போதுமிங்கு…
நாடே மகிழ்ந்து களிக்கும்…

சித்திரை என்றதுமே..
சித்திரைத் திருவிழா
வந்து நெஞ்சில்
உலாப்போகும்…
மதுரையும் ..
மாமதுரைக் கோலாகலமும்…

சித்திரைத் தேர்
திருவிழாவோ
ஸ்ரீரங்கம் முழுதும் பவனி வர….

முக்கனிகளின் அரசியான
சேலத்து மாம்பழத்தின்..
வாசமும் சுவையும்…
காற்றினிலே கனிந்து வர..

காத்திருந்து..காத்திருந்து…
வந்தே விட்டது சித்திரை திங்கள்..

சரம் சரமாய் கொன்றை பூக்களை
சூடிக்கொண்டு..
மதி மயக்கும் மஞ்சள் நிறத்தோடு
மங்களகரமாய்…

மங்களமே உண்டாகட்டுமென..
வாழ்த்துகிறேன் …வணங்குகிறேன்.

600x150-benner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*