France

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் “நோ ஃபயர் சோன்” போர்க் குற்ற ஆவணப்படம்

இலங்கை இறுதிகட்டப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களை வெளிப்படுத்தும் “நோ ஃபயர் சோன்” ஆவணப் படம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் திரையிடப்பட்டது.

தமிழருக்கான பிரான்ஸ் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் சார்பில் இந்த ஆவணப் படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. “நோ ஃபயர் சோன்” ஆவணப் படத்தை இயக்கிய, இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குனரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த ஆவணப் படத்தில், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடைபெற்றபோது, “நோ ஃபயர் சோன்” என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் மீதும், இலங்கை ராணுவம் குண்டுகளை வீசிக் கொன்ற காட்சிகள் ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளன.