அமரர் அந்தோனிப்பிள்ளை ஸ்ரானிஸ்லாஸ் 31ம் நாள் நினைவஞ்சலி

 

          அமரர் அந்தோனிப்பிள்ளை ஸ்ரானிஸ்லாஸ்
(அச்சா- இலங்கை செஞ்சிலுவைச் சங்க வடமராட்சி கிழக்குப் பிரிவுத் தலைவர்,

                           சமாதான நீதவான்   , இளைப்பாறிய உப தபால் அதிபர்)
தோற்றம் : 2 நவம்பர் 1943                    —                           மறைவு : 9 மார்ச் 2014

 

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், தாளையடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிப்பிள்ளை ஸ்ரானிஸ்லாஸ் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

 

அன்புள்ள பன்பனே நல்ல அரும்பெரிய உறவே
உன்னைப் பிரிந்து நாமும் உள்ளமுறக் குமுறுகின்றோம்
என்ன கொடுமையிங்கு எம்மை விட்டுப் பிரிந்து சென்றாய்
என்நாளும் உன் நினைவாய் இங்கு ஏங்கித் தவிக்கின்றோம்…!

பேரும், புகழும் கொண்டு பாரில் வாழ்ந்து இன்று
பேரின்ப வீடு சென்ற எம் பெரும் வழிகாட்டியே
நூறாண்டானாலும் உன் நினைவலைகள் எம்மை விட்டகலாது
உனது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்…!

அன்னாரின் 31ம் நாள் நினைவுப் பிரார்த்தனை 08-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று தாளையடி புனித அந்தோனியார் ஆலயத்தில் காலை 06:30 மணியளவில் திருப்பலி நடைபெறும்.

அன்னாரின் மரணச் செய்திகேட்டு தொலைபேசி வாயிலாகவும், நேரில் வந்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், அவரது இறுதிக்கிரியைகளிலும் நேரடியாகப் பங்குபற்றித் துயர் பகிர்ந்தவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவியவர்களுக்கும் எமது துயரம் கலந்த நன்றிகள்.

 

தகவல்
குடும்பத்தினர்

 

-600x150-benner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*