இலங்கை கடல் பகுதியில் பிரான்ஸ் நாட்டுக் குண்டு பரபரப்பு

ஏற்கனவே விடுதலைப் புலிகள் ஒன்று  சேர்கிறார்கள் என்ற சந்தேகத்தில் உள்ள, இலங்கை இராணுவம் சமீபத்தில் காஸ் சிலிண்டர் குண்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இது இவ்வாறு இருக்கையில், நேற்றைய தினம்(02) அன்று முந்தல் கடலில் மிதந்து வந்ததாக கூறப்படும் மற்றுமொரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலில் மிதந்து வந்த     news-01இக் குண்டை சிறுவர்கள் முதலில் கண்டுபிடித்து பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள். இதனை அவர்கள் வீட்டில் வைத்து ஆராய முற்பட்டவேளை பெற்றோர் இதனைக் கண்டுபிடித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். குறித்த இக் குண்டு, உள்ளூர் தயாரிப்பு அல்ல. இது பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு ஆகும்.

இதனை நீங்கள் தற்செயலாகக் கண்டால், பொலிசார் அல்லது இராணுவத்திற்கு அறிவிக்குமாறு அதில் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டுள்ளதாக அக்குண்டை மீட்ட நபர்கள் சிலர்  தெரிவித்துள்ளார்கள். கடலில் இக் குண்டு மிதந்துவரக் காரணம் என்ன?  என்பது ஒரு புறம் இருக்க, பிரான்ஸ் நாட்டுக் குண்டு இலங்கை கடல் பகுதியில் எவ்வாறு வந்தது என்பது பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. பிரான்ஸ் குண்டுகளை ஏற்றிய கப்பல் ஒன்று, இலங்கை பக்கம் வந்து சென்றுள்ளதா ? என்ற கோணத்தில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.

இதேவேளை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இன்று வன்னி செல்ல இருப்பதாக , செய்திகள் வெளியாகியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். சமீப காலமாக இலங்கையின் சில பாகங்களில் அசாதாரண நிகழ்வுகள் சில இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்க  விடயம் ஆகும்.

-600x150-benner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*