பாரிஸ் நகரில் முதல்முறையாக பெண் மேயர்

பிரான்ஸில் பாரிஸ் நகரின் மேயர் தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.   news-01பிரான்ஸில் பாரிஸ் நகரின் மேயர் தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பாரிஸ் நகரில் முதல்முறையாக பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பிரான்ஸில் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்தேயின் சோஷலிஸ்ட் கட்சிக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போதைய பிரதமர் ஜீன்மார்க் அர்யலுட்டுக்குப் பதிலாக புதிய பிரதமராக மானுவேல் வால்ஸ் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பாரிஸில் மேயர் பதவிக்கு சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் அன்னி ஹிடால்கோ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாப்புலர் இயக்கத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் வேட்பாளர் நத்தாலி கோஸியஸ்கோ மோர்ஜித் போட்டியிடுகிறார்.

பாரிஸில் முதல்கட்ட வாக்குப்பதிவு நியூ காலடோனியாவில் உள்ள பிரெஞ்சு பசிபிக் பகுதிகளில் கடந்த வாரம் நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப்பதிவின்படி, நத்தாலி கோஸியஸ்கோவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நேறற்று நடைபெற்றது. எனினும், சோஷலிஸ்ட் வேட்பாளர் அன்னி ஹிடால்கோ, பாரிஸில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

-600x150-benner

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*