பாரிஸ் நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

 பாரிஸ் பஸ்ரில் நகரில் இன்று இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!     news-01

இம்மாதம் 13 ஆம் திகதி கிளிநொச்சி தருமபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்ட விஜயகுமாரி அவர்களையும், அவரது 13 வயதேயான மகள் விபூசிகாவையும் விடுவிக்கக் கோரியும் அதன் தொடர்ச்சியாகத் தமிழர் தாயகப் பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் கைதுகள் இராணுவ வன்கொடுமைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த பிரான்சு அரசைக் கோரியும் பிரான்சு பரிசில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று  (26.03.2014) இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் பரிஸின் முக்கிய நகரான பஸ்ரில் (Bastille) பகுதியில் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.

சாதகமற்ற காலநிலைக்கு மத்தியிலும் கைகளில் பதாகைகளைத் தாங்கியவாறு நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

பல வெளிநாட்டவர்களும் போராட்டத்தின் நோக்கத்தை ஆவலோடு கேட்டறிந்து சென்றமையைக் காணமுடிந்தது.

986630_609044099190217_181600682_n

1624114_609044095856884_1699140560_n

10150939_609044092523551_1439260458_n

10154866_609044089190218_834401744_n

-600x150-benner

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*