மரணஅறிவித்தல்-திரு கணபதிப்பிள்ளை செல்வராஜா,ஐயனார் கோயிலடி சுன்னாகம .

                                                             திரு கணபதிப்பிள்ளை செல்வராஜா
                            தோற்றம் : 14 ஓகஸ்ட் 1938           —                       மறைவு : 23 மார்ச் 2014

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் ஐயனார் கோயிலடியை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்வராஜா அவர்கள் 23-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மார்க்கண்டு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், மணியம், திருமதி மகேஸ்வரி, மற்றும் திருமதி அம்பிகாவதி ராசம்மா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சியாமளா(ஆசிரியை- இராமநாதன் கல்லூரி), மயூரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற உமையாளன், றமணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயகிருஷ்ணன்(பிரதித் திட்டப்பணிப்பாளர் – கிளிநொச்சி), கோமதி(முன்னாள் சிறாப்பர் கரைச்சி பிரதேச சபை- கிளிநொச்சி), வைஷ்ணவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருண், அபிராமி, ஆரணி, காருண்யா, கிரீசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2014 புதன்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மயூரன்(மகன்) பிரான்ஸ்
தொடர்புகளுக்கு
விஜயகிருஷ்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772963760
சியாமளா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779357566
மயூரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33143101142
றமணன் — கனடா
தொலைபேசி: +14163006660

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*