பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் திருவுருவச்சிலை திரைநீக்கம்!

பிரான்சு லாக்கூர்னேவ் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், கேணல் பருதி அவர்களின் திருவுருவச்சிலை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு லாக்கூர்நெவ் பகுதியில் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் சிலைக்கு அருகாமையில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை லாக்கூர்நெவ் தமிழ்ச் சங்கச்செயலாளர் திருமதி வனிதா அனுரா அவர்கள் ஏற்றிவைக்க, பரிதி அவர்களின் திரு உருவத்தை லாக்கூர்நேவ் நகரசபை உறுப்பினரும், கேணல் பரிதியின் உற்ற நண்பரும், தமிழ் மக்களின் விடுதலையை நேசிப்பவருமான திரு. அந்தோனி ரூசல் அவர்கள் திரை நீக்கம் செய்துவைக்க, ஈகைச்சுடரினை மாவீரர் கேணல் பரிதி அவர்களின் பெற்றோர்களும், மாவீரர் மணிமாறனின் பெற்றோர்களும் ஏற்றி வைத்தனர்.

திரு உருவத்திற்கான மலர் மாலையை கேணல் பரிதி அவர்களின் துணைவியாரும் மகளும்அணிவித்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து மக்களின் மலர் வணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து உரைகள் இடம்பெற்றன. லாக்கூர்நெவ் தமிழ்ச்சங்கத்  தலைவர் திருமதி யாழினி அகிலன், லாக்கூர்னோவ் மாநகரசபை முதல்வரும் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் ஆசிரியர், திரு சத்தியதாசன், லாக்கூர்நெவ் மாநகர சபை உறுப்பினர் அந்தோனி ரூசல், ஆகியோர் கேணல் பரிதி அவர்களின் நினைவாக உரையாற்றினர். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன. இந்நிகழ்வில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உணர்வுடன் கலந்துகொண்டனர்.

paruthi 06

paruthi 04

paruthi 03

paruthi 01

paruthi 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*