777 ரக விமானம் புலிகள் பயன்படுத்திய இரணைமடு விமான ஓடுபாதையில் – ஆங்கில இணையத்தளம்

காணாமல் நிலையில் தேடப்பட்டுவரும் மலேசிய எயார்லைன்ஸ் விமானம் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய இரணைமடு விமான ஓடுபாதையில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிஸினஸின்சைடர் என்னும் ஆங்கில இணையத்தளம் வெளியிட்ட தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காணாமல் போன மலேசிய விமானம் இறுதியாக ரேடாரில் பதிவாகிய உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட இடத்தில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 4 மணி நேரம் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இராணுவ ரேடார் தரவுகளின் அடிப்படையில் 239 பயணிகளுடன் இந்த ஜெட் விமானம் தீவிரவாதிகளால் அல்லது விமான குழுவினால் கடத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என தெரியவருகிறது.
4 மணிநேரத்தில் இந்த விமானம் பல இடங்களை சென்றடைந்திருக்க முடியும். மேற்கு நோக்கில் பறந்து சென்றிருக்கலாம் என்று கருதினால் கூட 2 ஆயிரத்து 530 மைல்கள் வரை பயணம் செய்ய தேவையான எரிபொருள் விமானத்தில் இருந்துள்ளது.
அத்துடன் இந்த விமானம் பொது திசையில் திருப்பட்டு இந்தியா அல்லது பாகிஸ்தான் நோக்கி பயணித்திருக்க வேண்டும் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தமான் தீவுகளில் தரையிறக்க சாத்தியம் இருக்கலாம் என்பதால் அதிகாரிகள் தேடுதல் நடத்தி வருகின்றனர். இந்த தீவுகளில் பல தீவுகள் மக்கள் குடியேறாத அடர்ந்த காடுகளை கொண்டுள்ளன. அங்கு ஒரே ஒரு விமானம் நிலையம் மட்டுமே உள்ளது.
அழித்தொழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலையில் உள்ள இலங்கையின் வடக்கில் இருக்கும் சிறிய மற்றும் ஒழுங்கற்ற விமான ஒடுத்தளத்தில் காணாமற்போன போயிங் 777 விமானம் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என வாசகர் யூகித்துள்ளதாகவும் பிஸினஸின்சைடர் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
malasia airplan