திருமண வாழ்த்து – விமலதாஸ் நிசாந்தினி 05-06-2017

இன்று வந்த புது உறவு என்றும் உன்வாழ்வை உயர்த்தும்… உயர்ந்த அன்பு கிடைக்கையிலே வாழ்வினிலென்றும் பேரின்பம்….

கடந்து வந்த காலங்கள் என்றும் நெஞ்சில் தங்கிடும்… கலைந்து சென்ற நட்புகளால் கண்ணீர்தான் பெருகிடும்…

சண்டைகளும் சலனங்களும் உங்கள் அன்பைக் கூட்டிடனும்… இணையும் இந்த பந்தத்தால் புதுவாழ்வு ஒன்று பிறந்திடனும்…

நீ சிரித்திடும் சிரிப்பினிலே பூஞ்சோலையொன்று பூத்திடனும்… நீ பார்க்கும் பார்வையிலே பாச ராகம் பொழிந்திடனும்…

கொஞ்சச் சொல்லும் மழலையின் வாடாத புன்னகைப்போல்… வருஷம் பல சென்றாலும் உங்கள் அன்பு மலர் சிரித்திடனும்…

சொர்கத்திலே நிச்சயமாம் திருமணங்கள் அனைத்துமே… “உங்கள் மனம்சேரும் திருமணத்தால் சொர்க்கம் மண்ணில் பூத்திடுமே…..”

திருமண வாழ்த்து – விமலதாஸ் நிசாந்தினி தம்பதியினரை பதினாறும் பெற்று  பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றேன்… வாழ்க வளமுடன்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*