ஈழத்தமிழர் நல்வாழ்வு சீட்டிழுப்பு -சுவிஸ்

அன்பான புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு! எமக்காகப் போராடி, சிங்களத்திடம் சிறைப்பட்டு வலிகளையும் அவலங்களையும் சுமந்தவர்களாக, தமிழ் அரசியல் கைதிகள் என்ற அடைமொழியுடன் நீண்டகாலமாக சிறைகளுக்குள் அவதியுறுகின்ற போராளிகளும் விடுதலைக்காக உழைத்த மக்களும் விடுவிக்கப்பட வேண்டும்! எம்மைப் போன்று அவர்களும் சகல உரிமைகளும் கிடைக்கப் பெற்றவர்களாக தமிழ்ச் சமுகத்துடன் இணைந்து, தங்களுடைய குடும்பங்களுடனும் குழந்தைகளுடனும் உறவுகளுடனும் ஒன்றாக வாழவேண்டும்! சிறையில் இருக்கின்ற தந்தை வருவாரென ஏங்கித்தவிக்கின்ற குழந்தைகளின் கனவுகள் நியமாக வேண்டும்! தான்பெற்ற பிள்ளை நாட்டுக்காகப் போராடிச் சிறையிருக்கின்ற வேதனையில் நடைப்பிணங்களாக அலைகின்ற, நித்தமும் அழுதுபுலம்புகின்ற பெற்றோரின் அழுகுரல்கள் ஓயவேண்டும்! நான்கு சுவர்களுக்குள் நாட்களைப் பலவருடங்களாக எண்ணிக்கொண்டு, தேசிய உணர்வுகளுடன், யாராவது தங்களுடைய விடுதலைக்கு உதவுவார்களா என எதிர்பார்த்து காத்திருக்கின்ற எம்தமிழ் உறவுகளின் விடுதலைக்காக நாங்கள் எவ்வளவு செய்துள்ளோம்?

எமக்காக வலிகளைச்சுமக்கின்றவர்களின் விடுதலைக்கு நாங்கள் ஆற்றவேண்டிய பணி என்ன? அதை நிறைவாகச் செய்துள்ளோமா? இவ்வாறு சிறைப்பட்டுள்ள போராளிகளின் பிள்ளைகள், மனைவி, பெற்றோர்கள், சகோதரிகள் போன்றவர்கள் நித்தமும் அனுபவிக்கின்ற துயரங்களைத் துடைப்பதற்காக நாங்கள் நிறைவாக உதவிகளை வழங்கியுள்ளோம்? ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள்! சிங்களத்தின் சிறைகளுக்குள் வாடுகின்ற ஒவ்வொரு போராளியையும் விடுவிக்க வேண்டியதும், அவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டியதும், எமக்காகப் போராட்டத்திற்கு தோள் கொடுத்தவர்களை விடுவிக்க வேண்டியதும் காலம் எம்மிடம் ஒப்படைத்துள்ள கடமையாகும். இக்கடமையைப் பணியாக ஏற்று நாங்கள் பயணிக்கின்ற பொழுது, நாங்கள் நிறைவாகச் செய்துள்ளோமா என்பதையும் அவதானிக்க வேண்டும். இதனை உணர்ந்துகொண்ட போராளிகள் கட்டமைப்பு, சிறைகளில் இருக்கின்ற போராளிகள் மற்றும் போராட்டத்திற்குத் தோள் கொடுத்தவர்களின் விடுதலைக்காகப் பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கிவருகின்றது.

இச்செயற்றிட்டத்தினை மேலும் வினைத்திறனாக மேற்கொள்வதன் ஊடாக தமிழ் அரசியல் கைதிகளின் (போராளிகளின்) விடுதலைக்கும் மறுவாழ்விற்கும் உதவி வழங்குவதற்கான நல்வாய்ப்புச் சீட்டிழுப்பு என்கின்ற விசேட திட்டத்தினை எமது கட்டமைப்புஅறிமுகப்படுத்துகின்றது. இத்திட்டத்தின் மூலமாகக் கிடைக்கின்ற நிதி முழுமையாக சிறைகளில் வாடுகின்ற, பரிதவிக்கின்ற, ஏதிலிகளாக்கப்பட்டுள்ள, நரக வேதனைகளை எமது கண்முன்பாகவே அனுபவித்துக் கொண்டிருக்கின்ற எம்தமிழ் உறவுகளின் விடுதலைக்கும்; சிறைக்கைதிகளின் குடும்பங்களின் மறுவாழ்விற்கும் வழங்கப்படும். எனவே புலம்பெயர்ந்து வாழுகின்ற சகல தமிழ் மக்களும் இந்த நல்வாய்ப்புச் சீட்டிழுப்பிற்கான பற்றுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதன் மூலமாக, சிங்களச் சிறைகளுக்குள் துயரங்களை அவதியுறுகின்ற எம்தமிழ் உறவுளுக்கு உதவிகளை வழங்க முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதேபோல் எமது போராளிகள் கட்டமைப்புடன் இணைந்து பணியாற்றுகின்ற போராளிகள், ஒருங்கிணைப்பாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், தேசியச் செயற்பாட்டாளர்கள், எமது அமைப்பின் கிளைகளின் செயற்பாட்டாளர்கள், சங்கங்கள் மற்றும் உபஅமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், போன்ற சகலரும் இந்த நல்வாய்ப்புச் சீட்டிழுப்பிற்கான பற்றுச் சீட்டுக்களை புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்களின் கரங்களில் கொடுத்து, அவர்கள் வழங்குகின்ற சிறுதொகை உதவியினை சிறையிருக்கின்ற எம்தமிழ் உறவுகளின் விடுதலைக்காக வழங்க முன்வருமாறும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். இது எங்களுக்காகப் போராடியவர்களின் விடுதலைக்காக நாங்கள் செய்கின்ற சிறு பணி என்பதை மனப்பூர்வமாக ஏற்று இச்செயற்றிட்டத்திற்கு உயிர்கொடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

                                                               ‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*