தியாகதீபம் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில்..

தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரை வெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில்குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் நெற்று புதன்கிழமை பகல் 9-30 மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது

வட மாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் மக்கள் தமது விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை ரீதியான போராட்டம் மூலம் தமிழர்களின் போராட்டத்தினை உலகம் திரும்பிப்பார்க்க வைத்தவராக அன்னை பூபதி விளங்கிவருகின்றார்.

கடந்த காலத்தில் நிலவிய சூழ்நிலைகள் காரணமாக அன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படாத நிலையில் இம்முறை அவற்றினை பல்வேறு தரப்பினரும் நினைவு கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*