நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையவேண்டுமா? விபரம் உள்ளே!

www.ntkweb.com இணையதளம் மூலமாக நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணையும் முறை சென்ற 13 ஆம் தேதி வேட்பாளர் அறிவுப்புக்கூட்டம் நடைபெற்ற அன்று நாம் தமிழர் தகவல் தொழில்நுட்ப பாசறையால் வெளியிடப்பட்டது..

நாம் தமிழர் கட்சி ஆட்சியின் செயல்பாட்டு வரைவு அறிக்கை வேலையில் அனைவரும் இருப்பதால் இன்னும் தலைமையிலிருந்து இச்செய்தியை பரப்ப முடியவில்லை.. இருப்பினும் முகநூலிலும் பகிரியிலும் (whatsapp) தம்பிகள் செய்தியை பகிர்வதால் உலகமுழுக்க வாழும் தமிழ்த்தேசிய இன உறவுகள் இணைந்தவண்ணம் இருக்கிறார்கள்..

ஒவ்வொருவரும் இணையும் பொழுது முதன்மை பொறுப்பாளர்களுக்கு குறுஞ்செய்தி வரும்.. அப்படி கடந்த ஆறு நாட்களாக என் அலைபேசி குறுஞ்செய்திகளால் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.. இன்று மதியம் ஒரு அலுவலக வேலை காரணமாக அலைபேசியை அமைதிப்படுத்துவிட்டு விட்டிருந்தேன்.. அப்படி இன்று மதியத்திலிருந்து ஆறு மணிநேரத்தில் 200 உறவுகள் உறுப்பினராக இணைந்திருந்தனர். சராசரியாக ஒரு மணிநேரத்தில் 33 உறவுகள் நாம் தமிழராக ஒன்றிணைகிறார்கள்.

அன்னைத் தமிழும் அனைத்திற்கும் மேலான நமது தேசியத்தலைவரும் நம்மை இணைக்கிறார்கள்..

தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கட்சிக்கும் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை.. எவ்வித விளம்பரமுமில்லாமல் இப்படி எந்த கட்சிக்கும் நடக்காது.. உலகம் முழுக்க இருந்து இப்படி உறுப்பினர் கோரிக்கை வரவாய்ப்பே இல்லை…

# நம்மை நோக்கி நம்பிக்கையோடு தமிழின உறவுகள் வருகிறார்கள்.. நாம் வளர்கிறோம்.. நாம் எதிர்பார்த்ததையும் தாண்டி வளர்கிறோம்.. இன்னும் நேர்மையாக இன்னும் அதிக அர்ப்பணிப்போடு நிற்கவேண்டிய தருணம்..

Packiarajan Se300_o

www.ntkweb.com இணையுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*