தடைகளை தகர்த்து முன்னகர்வோமாக:அனைத்துலக தொடர்பகம்

நாம் இன்று எதிர்கொள்ளும் சவால்கள் யாவும் முன்னெப்பொழுதும் new-Gif1இல்லாத வகையில் நயவஞ்சகம் நிறைந்தவை. முள்ளிவாய்க்காலில் தமிழினத்திற்குப்பேரழிவினை ஏற்படுத்திய பின்னர் சிங்கள இனவாத அரசின் கவனம் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களை நோக்கித் திசை திருப்பிவிடப்பட்டுள்ளது.
சிங்கள இனவாத அரசின் திட்டமிட்ட தொடர் இனவழிப்பு நடவடிக்கையினை முள்ளிவாய்க்கால் பேரழிவினூடாக சர்வதேசத்திற்கு எடுத்துரைத்து,அதற்கான நீதியை வேண்டித் தொடர் போராட்டங்களில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுவருகிறார்கள். இவர்களின் ஜனநாயகவழியிலான போராட்டங்கள் சிங்கள தேசத்திற்கு நெருக்கடியாக உள்ளது.
இதனால் புலம்பெயர் ஈழத்தமிழர் மத்தியில் குழப்பங்களை உருவாக்கி, தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையினைஇல்லாதொழிக்கும் பல நடவடிக்கைகளில் சிங்கள அரசு ஈடுபட்டுவருகின்றது. நன்கு திட்டமிட்டு நகர்த்தப்பட்டுவருகின்ற எதிரியின் இவ்நடவடிக்கைகளிற்கு அறிந்தும் அறியாமலோ, தெரிந்தும் தெரியாமலோ ஒரு சிலர் உடந்தையாக உள்ளனர் என்பது மிகவும் கவலைக்கிடமானவிடையமாகும்.
புலம்பெயர் மக்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக உள்ள அனைத்துலக தொடர்பகக் கட்டமைப்பினை சிதறடித்தல் மற்றும் தமிழ் மக்களால்மேற்கொள்ளப்படும் அரசியல் வேலைத்திட்டங்களை முன்னகரமுடியாது தடுத்தல் போன்றவை இவர்களின் இன்றைய பிரதான இலக்காகும்.அதனடிப்படையில் பல்வேறு அணுகுமுறைகளுடாக முக்கியமான கிளைகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் நாசகார சக்திகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார்கள்.
இதனொரு வெளிப்பாடாகவே பிரெஞ்சுக் கிளை பாரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. உயிர்அச்சுறுத்தல்களிற்கு மத்தியிலும் தேச விடுதலையினைநெஞ்சிலிருத்தி பிரெஞ்சுக் கிளை பொறுப்பாளரும் செயற்பாட்டாளர்களும் பொறுமையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்வதுடன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சட்டரீதியாகக் கையாள்வதனை வரவேற்கிறோம்.
அதேவேளை பிரெஞ்சுக் கிளை பொறுப்பாளர் மீது நேற்றைய தினம் (17/2) இரவு சிங்கள கைகூலிகள் மேற்கொண்ட கோழைத்தனமான தாக்குதலை நாம்வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதலானது சிங்கள பேரினவாத அரசின் கைக்கூலிகளால் பிரெஞ்சுக் கிளை எதிர்கொள்ளும் பேராபத்துக்களைமட்டும் அன்றி, ஈழத் தமிழர்கள் அரசியல் ரீதியாக விழிப்படைந்து செயற்பட வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.
எத்தகைய நெருக்கடிகள் வரினும், மரணித்த மாவீரர்களினதும் மக்களினதும் தியாகத்தை நெஞ்சில் சுமந்து, தமிழீழ விடுதலை என்ற உயரியஇலட்சியத்தை இலக்காகக்கொண்டு எமது விடுதலைப் போராட்டம் தொடரும்.
– புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் –
மகேஸ்
அனைத்துலக தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்Gif-yarlfm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*